என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் மீது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்- மு.க.ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்30 Jan 2020 10:37 AM GMT (Updated: 30 Jan 2020 10:37 AM GMT)
என் மீது இரண்டல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் இருந்ததால்தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றோம். இத்தேர்தல் வெற்றியை முறையாக அறிவித்திருந்தால் தி.மு.க. கிட்டத்தட்ட 90 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும். இதற்காகத்தான் உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினோம். இல்லாவிட்டால் இந்த வெற்றி கூட கிடைத்திருக்காது.
இந்த வெற்றி அடுத்து வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. என் மீது இரு நாட்களுக்கு முன்பு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. என் மீது இரண்டல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நீட் தேர்வை தடுக்கும் ஆற்றல் இந்த அரசுக்கு இல்லை.
இதேபோல எந்தக் காலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப் பேரவையில் ஆளுங்கட்சியினர் அறிவித்தனர். ஆனால் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலையில்தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×