search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜா
    X
    எச்.ராஜா

    திமுக, காங்கிரஸ் கட்சிகள் வன்முறையை தூண்டி வருகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கட்சிகள் வன்முறையை தூண்டி வருகிறது என்று எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
    தேனி:

    தேனியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியில் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படவில்லை.

    இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் சதி செயலாகவே கருதப்படுகிறது. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டும் விதத்தில் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் கண்டிக்கத்தக்கது. 

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்புகள் முன்னின்று நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததால் ரவீந்திரநாத்குமார் எம்.பி. கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்தவர்களை தேச பக்தர்கள் தாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×