என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனா வைரஸ்- தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் 51 பேர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள 51 பேரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் தங்கி இருந்த வெளிநாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்புகிறார்கள்.

  பல்வேறு தொழில் செய்வதற்கும், படிப்பதற்கும் சீனா சென்றவர்கள் இந்தியா திரும்ப அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

  சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்நாட்டு தூதரகம் மூலம் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

  இதற்கிடையே சீனாவில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு சென்னை உள்ளிட்ட 7 சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுவரை 35 ஆயிரம் பயணிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் 20 பேருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.

  அவர்களது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

  இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த 3 பேருக்கு ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 பேருக்கும், காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் உள்ளது. அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்த பிறகே 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா? என்பது தெரியவரும். இந்தியாவில் 450 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

  சீனாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சமீபத்தில் கோவை மற்றும் பொள்ளாட்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த ஒருவர் என 8 பேர் சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தனர்.

  இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை.

  சீனாவில் இருந்து இது வரை தமிழ்நாட்டுக்கு 51 பேர் திரும்பி உள்ளனர். அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:-

  சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள 51 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை நடந்தது. அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 51 பேர் வீட்டுக்கும் காலை, மாலை மருத்துவ பணியாளர்கள் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே, கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் 28 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இதுபோல் 51 பேரும் 28 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×