search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    வன்முறைக்கு எதிராக பேசும் ரஜினியின் படங்களில் வன்முறை காட்சி ஏன்? சீமான் கடும் தாக்கு

    வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்று சொல்லும் ரஜினி நடித்த அனைத்து படமும் வன்முறை படம் தான் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    ‘முரசொலி வெச்சிருக்கிறவர் தி.மு.க., துக்ளக் வெச்சிருக்கிறவர் அறிவாளி... நான் என்ன சொல்றேன், முதல்ல அந்த துக்ளக்கை வாங்கி உங்கள் ரசிகர்களுக்கு எல்லாம் கொடுங்க... ஏன்னா அவன்தான் உங்க படம் ஓடணும்னு தரையில சோறு போட்டு தின்னுட்டு இருக்கான்.. நாங்க தட்டுல சாப்பிடும்போதே கண்ட கண்ட நோய் வந்துடுது.

    ரஜினியை வைத்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது.. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேட்டால் ரஜினியிடம் பதில்லை.. ஆனால் ரஜினி முதல்வராக துடிக்கிறார். தூத்துக்குடியில் ஏன் அப்படி பேசினார்? வன்முறை எதற்கும் தீர்வு இல்லை என்று சொல்லும் ரஜினி நடித்த அனைத்து படமும் வன்முறை படம் தான்.

    ஆயுதம் எதற்கும் தீர்வு இல்லை என்றால் ராணுவத்தை கலைத்து விடுங்களேன்... காவல்துறையிடம் துப்பாக்கி எதற்கு? குருவி சுடவா? தடி எதற்கு? கொசு அடிக்கவா? பழனி பாபாவை தீவிரவாதி என்று சொல்லாதீர்கள்

    ரஜினிகாந்த்

    பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் வெவ்வேறு பொருள், வெவ்வேறு சொற்கள், ஒன்றாக கருதக்கூடாது. பழனிபாபா ஒரு தீவிரவாதி என்றால் சீமானும் தீவிரவாதிதான்.

    ஏனென்றால் நாங்கள் எங்கள் கருத்தை, கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்போம். பழனி பாபாவை கருத்தால் வீழ்த்தி இருந்தால் அது தீவிரவாதம். ஆனால் கருத்தால் வெல்ல முடியாமல் கத்தியால் வெட்டி வீழ்த்திய செயல் தான் பயங்கரவாத செயல்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×