search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசியபோது எடுத்த படம்.
    X
    தாராபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசியபோது எடுத்த படம்.

    சேலம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்கள்

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி குருநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் மலர்விழி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி சேட்டு, துணை தலைவர் பிரகாசம், பற்றாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குமார் வரவு- செலவு கணக்கினை வாசித்தார். சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது, தங்கள் பிரச்சினைகளை சொல்வதற்கும், தீர்வு காணவும் கிராம சபையினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தாராபுரம் ஊராட்சியில் உள்ள அனைத்து காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார வளாகம் எனது நிதியில் கட்டிதரப்படும், என்றார். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் கழிப்பிட வசதி, முதியோர் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுத்தனர்.

    தலைவாசல் ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சுமதி தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்து பேசினார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. முன்னதாக தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் பழுதடைந்த கழிப்பிடங்களை பராமரிப்பு பணி செய்வது, மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் தங்கம் மனோகரன், ஊராட்சி துணை தலைவர் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராமசபை கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. முன்னதாக தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, துணை தலைவர் கவுரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னகிரி ஊராட்சி மன்றத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் பார்வதி ஸ்ரீராம் தலைமையில் நடந்தது. முன்னதாக தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. துணைத்தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வீரபாண்டி, உத்தமசோழபுரம் உள்பட 20 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினவிழாவும், கிராமசபை கூட்டங்களும் நடந்தன. 
    Next Story
    ×