search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    தமிழில் குடமுழுக்கு கோருவது அரசியலுக்காக - அமைச்சர் பாண்டியராஜன்

    இறை நம்பிக்கையற்றவர்கள் அரசியலுக்காக தமிழில் குடமுழுக்கு வேண்டும் என கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் எனக்கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், அறநிலைய துறையினரை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலைய துறை சார்பில், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என பதிலளித்தது. 

    இந்த பதிலை நாளை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழில் குடமுழுக்கு கோருவது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

    இறை நம்பிக்கையற்றவர்கள் அரசியலுக்காக தமிழில் குடமுழுக்கு வேண்டும் என கூறி வருகின்றனர். தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. குடமுழுக்கு நடத்துவது குறித்த இறுதி முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுக்கும். ஆறாம் நூற்றாண்டு வரை தமிழில் மட்டுமே வழிபாடுகள் நடைபெற்றறுன. 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் சமஸ்கிருதத்தில் வழிபாடுகள் தொடங்கின. மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×