search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் வெடிகுண்டு சோதனை செய்தபோது எடுத்த படம்.
    X
    போலீசார் வெடிகுண்டு சோதனை செய்தபோது எடுத்த படம்.

    கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு: தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு சோதனை

    தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பெரியகோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் பழமை மாறால் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளின் கோபுர கலசங்களும் கீழே இறக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் கோவிலின் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல்வேறு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேக விழா நேற்று பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது.

    இந்நிலையில் பெரிய கோவில் ராஜகோபுரம் கலசம் உள்ளிட்ட மற்ற சன்னதிகளின் கோபுர கலசங்களும் தங்கமுலாம் பூசிவைக்கப்பட்டுள்ளதை கல்பாக்கம் இந்திரா காந்திகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவர் விஞ்ஞானி வெங்கட்ராமன், இந்திய தொழில்நுட்ப உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலசத்தின் தன்மை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

    மேலும் கும்பாபிஷேக விழாவினை யொட்டி பெரியகோவிலில் இன்று காலை ஸ்ரீஷோடச மகா காணபதி ஹோமம், பிரும் மச்சாரி பூஜை, மனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மெட்டல் டிடெக்டர் மற்றும் சச்சின் மற்றும் சீசர் ஆகிய மோப்ப நாய்கள் மூலம் திடீர் வெடிகுண்டு சோதனை செய்தனர். பெரியகோவில் முழுவதும் சுற்றி சுற்றி சோதனை செய்தனர். மோப்பநாய்கள் மோப்பம் பிடித்த இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மோப்பநாய்கள் அங்கும் இங்குமாக ஓடி ஆங்காங்கே மோப்பம் பிடித்தது. போலீசாரின் இந்த திடீர் சோதனையை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சை சரக டி.ஜ.ஜி. மற்றும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் விழா முடிவடையும் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பெரிய கோவில் வெடிகுண்டு சோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இந்த சோதனை நடைபெற்றது. பூமிக்க டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் எளிதில் கண்டுபிடிக்க கூடிய மெட்டல் டிடெக்டர் பயன்படுத் தப்படுகிறது. மேலும் பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் உடைமைகள் 24 மணிநேரமும் சோதனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×