என் மலர்

  செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  ஆண்டிப்பட்டி அருகே மகனுடன் மாயமான இளம்பெண்- தந்தை புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே மகனுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன். இவரது மகள் நதியா (வயது26). இவருக்கும் பாலூத்து பகுதியை சேர்ந்த ஜெயக்கண்ணன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  இவர்களுக்கு தருண் (6) என்ற மகளும் ஒரு மகளும் உள்ளனர். பாக்கியநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நதியா உடன் இருந்து தனது தந்தைக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

  சம்பவத்தன்று தனது மகன் தருணுடன் வெளியே சென்ற நதியா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பாக்கியநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது மாயமானார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×