search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் ஆய்வு செய்த காட்சி.
    X
    மாநகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் ஆய்வு செய்த காட்சி.

    மேட்டூர் தொட்டில் பட்டியில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆய்வு

    சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கி வரும் மேட்டூர் தொட்டிப்பட்டியில் குடிநீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
    சேலம்:

    மேட்டூர் அணையிலிருந்து தனிகுடிநீர் திட்டத்தின் மூலம், சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள 57 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து, நாள் ஒன்றிற்கு 124 எம்.எல்.டி வீதம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 90 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்புகள், 1,310 எண்ணிக்கையிலான வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் இணைப்புகள் மற்றும் 6,710 எண்ணிக்கையிலான பொது குடிநீர் குழாய் இணைப்புகளும் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 110 எண்ணிக்கையிலான குடிநீர் இணைப்புகள் மூலம் உரிய கால இடைவெளியில் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாநகர் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரில் திரவக் குளோரின் கலக்கும் விதத்தில் 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, 4 மண்டலங்களுக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள 57 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனிக்குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர் முழுமைக்கும் குடிநீர் விநியோகிக்கும் மேட்டூர் தொட்டில்பட்டியில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். தொட்டில்பட்டியிலிருந்து சராசரியாக நாள் ஒன்றிற்கு குடிநீர் விநியோகப் பணிகளுக்காக எவ்வளவு அளவு குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது எனவும் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து சேலம் மேட்டூர் நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நங்கவள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம், சேலம் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் கோம்புரான் காட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம் மற்றும் கருமலைக்கூடலில் நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள ஏ.வி. ராமன் வால் டவர் மூலம் மேற்கொள்ளப்படும் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். மேற்கூரிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய வளாகங்களை தூய்மையாக பராமரிக்கவும், பணி நேரங்களில் கவனத்துடனும், பாதுகாப்புடனும் பணியாற்றுமாறு சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் அசோகன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், மாநகர பொறியளார் முனைவர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×