search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காற்றில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - சீனாவில் சிக்கி தவிக்கும் கோவை மாணவி

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மேற்படிப்புக்காக சென்ற கோவை மதுக்கரையை சேர்ந்த மாணவி அங்கு சிக்கி தவிக்கிறார்.
    கோவை:

    சீனாவில் கொரோனா வைரஸ் 889 பேரை தாக்கியுள்ளது. 46 பேர் பலியாகியுள்ளனர். 3 கோடி பேர் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாமல் முடங்கியுள்ளனர். சீனாவை அடுத்து அந்த வைரஸ் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தடுப்பூசி மற்றும் மருந்துகள் இந்த வைரசுக்கு இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. காற்றில் வெகுவேகமாக பரவி வருகிறது.இதனால் கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தொழில், மேற்படிப்புக்காக தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் சீனாவில் தங்கியுள்ளனர். இவர்களின் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து சீனாவில் பயின்று வரும் கோவை மதுக்கரையை சேர்ந்த மாணவி போன் மூலம் பெற்றோரிடம் பேசினார். அப்போது சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, அடுத்த 3 நாள்களுக்கு மட்டுமே உணவு செய்ய தேவையான பொருள்கள் உள்ளது. காற்றில் பரவி வரும் இந்த வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க முகமூடி அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளியில் சென்று முகமூடி வாங்குவதற்கு அச்சமாக உள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் அதிக கூட்டம் அலைமோதுவதால் பலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றார்.

    இந்த நிலையில் சீனாவில் தவித்து வரும் தங்களது மகளை மீட்க பெற்றோர் போராடி வருகிறார்கள்.
    Next Story
    ×