search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர்திறக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்து விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 304 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1390 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை 6 மணி முதல் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. 40 கன அடி நீர் வருகிறது. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×