search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருமங்கலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் சிக்கினர்

    திருமங்கலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து நகை, பணம் பறிப்பு போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி சம்பவத்தன்று திருமங்கலம் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 30 வயதுடைய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

    அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் செக்கனூரணியை அடுத்துள்ள சிக்கம் பட்டியை சேர்ந்த தவமணி மகன் மகேந்திரன் (வயது 30) என தெரியவந்தது. கட்டிட வேலை பார்க்கும் இவர் அடிக்கடி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை, பணம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மகேந்திரன் வழிப்பறி செய்த 18 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலத்தை அடுத்துள்ள கே. வெள்ளா குளத்தை சேர்ந்தவர் கோ பாலகிருஷ்ணன் (வயது25). டாக்சி டிரைவரான இவரது காரை நாகமலை புதுக்கோட்டையை அடுத்துள்ள மாவிலி பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் அழகர் (வயது 29) என்பவர் திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கூத்தியார் குண்டு அருகே அழகர் போலீசாரிடம் பிடிபட்டார்.

    போலீசார் அவரை கைது செய்த விசாரணை நடத்தியதில் அழகர் மீது வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×