search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜலெட்சுமி
    X
    அமைச்சர் ராஜலெட்சுமி

    சங்கரன்கோவிலுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம்- அமைச்சர் ராஜலெட்சுமி தகவல்

    சங்கரன்கோவில் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ரூ .243 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் ராஜெலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 103-வது பிறந்தநாள் விழா கூட்டம் முப்பிடாதியம்மன்கோவில் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கருப்பசாமி, நகர பேரவை செயலாளர் சவுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் குமாரவேல், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் வேல்சாமி வரவேற்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாநில பேச்சாளர் பாரதீயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்போது அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:-

    அனைத்து தரப்பினரும் நலன் பெறும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் ரூ .243 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 2 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும். புதிய பஸ் நிலையம் விரைவில் செயல்படுத்தப்படும். சங்கரன் கோவில் தொகுதியில் ஆடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். காட்டிய வழியில், அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் பழனிச்சாமி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவது அம்மாவின் அரசு. சங்கரன்கோவில் தொகுதி மக்களின் தேவை அறிந்து நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தேவகி குழந்தைவேல், மாவட்ட பொருளாளர் சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் லெட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் முத்துமணி, ஹரிஹரகருப்பையா, நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஆப்ரேட்டர் மணி, ஸ்ரீதர், நிவாஸ், தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் காளிராஜ், ஆனந்த், முத்துக்குட்டி, ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர அவைத் தலைவர் கந்தவேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.

    Next Story
    ×