search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை
    X
    கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை

    கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    ஆனால் மத்திய அரசு குடியுமை சட்டதிருத்தத்தால் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவித்து வருகிறது.

    மத்திய அரசு சொல்வதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்துள்ளன.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வருமாறு:-

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன்,

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகம் கலிபூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், அபுபக்கர், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, ஐ.ஜே.கே.ஜெயசீலன், கொங்குநாடு கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

    இதில் உள்ள பாதக அம்சங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான போராட்டங்களை நடத்தலாம் என்று கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டம் அல்லது உண்ணாவிரத போராட்டம் நடத்தலாமா? என்று விவாதிக்கப்பட்டது.

    Next Story
    ×