என் மலர்

  செய்திகள்

  கைதான மோஜோம் அலி
  X
  கைதான மோஜோம் அலி

  சிறுமி பாலியல் வன்கொடுமை- அசாம் வாலிபருக்கு பிப். 6 ந்தேதி வரை நீதிமன்ற காவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகாசியில் 8 வது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் வாலிபருக்கு பிப்ரவரி 6-ந்தேதி வரை காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  விருதுநகர்:

  சிவகாசி அருகே 8 வயது சிறுமி காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

  கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் உத்தரவுப்படி 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

  வட மாநில வாலிபர்களுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதினர். அதன் பேரில் அந்த பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

  இதில் 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவியதாக உள்ளூர் வாலிபர் ஒருவரையும் போலீசார் பிடித்துள்ளனர். 4 பேரையும் ரகசிய இடம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 

  இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கைதான அசாம் வாலிபர் மோஜோம் அலியை, பிப்ரவரி 6-ம் தேதி வரை காவலில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  Next Story
  ×