search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேதாஜி சிலை
    X
    நேதாஜி சிலை

    ஆளுநர் மாளிகையில் நேதாஜி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

    சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தும் முக்கிய தலைவர்கள் புகழாரம் சூட்டினர். 

    இந்நிலையில், நேதாஜியின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    இந்த சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், விடுதலைக்கான வேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்தைக்கு உயிர் கொடுத்தவர் என தெரிவித்தார். 
    Next Story
    ×