search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பணியாளர்கள் - (உள்படம்) பரமேஸ்வரி
    X
    பல்லடம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பணியாளர்கள் - (உள்படம்) பரமேஸ்வரி

    சம்பளம் வழங்க கோரி நடந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி தீக்குளிக்க முயற்சி

    பல்லடம் அருகே சம்பளம் வழங்க கோரி நடந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் 115 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 199 பேர் பணியாளராக வேலைபார்த்து வருகின்றனர். பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் மையங்களுக்கு வாடகை பாக்கி மற்றும் காய்கறி, எரிவாயு சிலிண்டர் மற்றும் பொங்கல் முன்பணம் ஆகியவை வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி பல்லடம் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

    பல்லடம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர் சங்க தலைவி பரமேஸ்வரி என்பவர் திடீரென தனது உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பரமேஸ்வரி மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.

    இதுபற்றி தெரியவந்ததும் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட அலுவலகத்தில் தாருங்கள்.விரைவாக உங்களது கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதனை ஏற்று அங்கன்வாடி பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×