என் மலர்

  செய்திகள்

  அரிவாள் வெட்டு
  X
  அரிவாள் வெட்டு

  செல்போன் பறிக்கும் முயற்சியில் வியாபாரியை அரிவாளால் வெட்டிய கொள்ளை கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரத்தில் இன்று அதிகாலை பஸ்சுக்கு காத்திருந்த வியாபாரியை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

  அம்பத்தூர்:

  அயனாவரம் உஜ்ஜினி தெருவை சேர்ந்தவர் விஜய்சேகர். கோயம்பேட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் கடைக்கு செல்வதற்காக நூர் ஹோட்டல் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் விஜய்சேகரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் விஜய்சேகர் செல்போனை கொடுக்க மறுத்தார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் அரிவாளால் விஜய்சேகரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன், பணம் மற்றும் மளிகைக்கடை சாவி ஆகியவற்றை பறித்து தப்பி சென்று விட்டனர்.

  ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயசேகரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  Next Story
  ×