என் மலர்

  செய்திகள்

  கமல்ஹாசன்
  X
  கமல்ஹாசன்

  234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.
  சென்னை:

  நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அவர் சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

  அடுத்த கட்டமாக 2021-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு என்று கூறிவரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த இடைதேர்தல் எதிலும் போட்டியிடவில்லை.

  கிராமசபை கூட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் புறக்கணித்துவிட்டார்.

  கடந்த நவம்பர் 7ந்தேதி 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் ரஜினி கலந்துகொண்டார். இருவரும் மேடையிலேயே இணைந்து செயல்படுவது குறித்து பேசியதால் ரஜினி, கமல் இணைவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

  ரஜினிகாந்த்

  பின்னர் தி.மு.க அறிவித்த போராட்டத்தில் கலந்துகொள்வதாக கமல் கட்சி அறிவிக்க தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று செய்திகள் பரவின.

  கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்துகள் தான் அரசியலில் சர்ச்சையாகி பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் கமல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

  கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியின் பல்வேறு அணிகளுக்கு சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அடுத்து கமல்ஹாசன் தனது முழு கவனத்தையும் சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே செலுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.

  2021 சட்டசபை தேர்தலை மட்டும் தனது இலக்காக வைத்து செயல்படும் கமல்ஹாசன் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க தயாராகி வருகிறார்.

  தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறார்.

  இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஏஜி.மவுரியா கூறியிருப்பதாவது:-

  கமல்ஹாசனின் இந்த சுற்றுப்பயணம் தமிழ்நாடு முழுக்க 234 சட்டசபை தொகுதி வாக்காளர்களையும் சந்திக்க திட்டம் தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது சில தொகுதிகளுக்கு கமலால் செல்ல முடியாமல் போனது.

  ஆனால் இந்த முறை அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல திட்டம் வகுக்கப்படுகிறது. கட்சி சார்பில் 114 மாவட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கமல் சுற்றுப்பயணம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

  இந்த பிரசார சுற்றுப்பயணத்துக்கு அடுத்த 50 வாரங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய பிப்ரவரி 21-ந்தேதி பிரசாரத்தை தொடங்குபவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதை நிறைவு செய்வார். இதற்காக பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

  இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பிரசாரமும் இன்னொரு பக்கமும் படப்பிடிப்பும் நடக்குமாறு திட்டமிடப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த பிறகு கமல் அரசியலில் இன்னும் வேகம் எடுப்பார்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  Next Story
  ×