என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  செய்யாறு அருகே பள்ளி மாணவன் அடித்துக் கொலை?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செய்யாறு அருகே பைங்கினர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அருகில் மாணவன் பிணமாக கிடந்தான். அவன் எப்படி இறந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  செய்யாறு:

  செய்யாறு பாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் டீக்கடை தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (வயது 14). வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  மாணவன் கடந்த 20-ந்தேதி மாலை வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை மாணவன் கார்த்திக் பைங்கினர் ஏரிக்கு செல்லும் கால்வாய் அருகில் பிணமாக கிடந்தார். 

  பிணத்தின் அருகே மது பாட்டிலும் விஷபாட்டிலும் கிடந்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார? அல்லது மாணவனை அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா என செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×