search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலி ஆவணம் தயாரித்து ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது

    கோவை நிதிநிறுவனத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மீனாட்சிபுரத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த லட்சுமி என்பவர் கிளை மேலாளராகவும், பாலக்காடு சொர்ணூர் பகுதியை சேர்ந்த பிஜூ(40) என்பவர் தங்கநகை மதிப்பீட் டாளராகவும் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று இந்த நிறுவனத்தில் 2018-19-ம் ஆண்டிற்கான ஆடிட்டிங் நடந்தது. அப்போது அந்த நிறுவனத்தில் 5 கிலோ 209.42 கிராம் தங்க நகை இருப்பதாக கணக்கு காட்டப்பட்டது.

    ஆனால் சரிபார்த்தபோது 4 கிலோ 650.95 கிராம் நகை மட்டுமே இருந்தது. 1 கிலோ 158.47 கிராம் நகையை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மேலாளர் தயானந்தன் கிளை மேலாளர் லட்சுமியிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் மற்ற கணக்கு வழக்குகளை சரி பார்த்தார். அப்போது லட்சுமி, பிஜூ மற்றும் ஊழியர்களாக வேலை பார்த்து வரும் சுபா மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து 1 கிலோ தங்க நகையை 25 பேர் அடகு வைத்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளனர்.

    அதன்மூலம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் மோசடியில் 4 பேர் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேலாளர் தயானந்தன் அவர்கள் 4 பேரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    மேலும் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புகார் கொடுத்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

    மேலும் தங்கநகை மதிப்பீட்டாளர் பிஜூவை கொச்சியில் வைத்து கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்த தும் சுபா மற்றும் விக்னேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×