search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆன்லைன் 3 நம்பர் லாட்டரி விற்றவர் கைது

    புதுவையில் 3 நம்பர் ஆன்லைன் லாட்டரியை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பல்வேறு முறைகளில் மோசடி லாட்டரி விற்பனைகள் நடந்து வருகிறது.

    முதலியார்பேட்டை போலீசார் அம்பேத்கார், சிவக்குமார், துளசி ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர்.

    அப்போது 100 அடி மேம்பாலத்துக்கு கீழே அமர்ந்து சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கேரள மாநிலத்தின் 3 நம்பர் ஆன்லைன் லாட்டரியை போன் மூலமாக பரிமாற்றம் செய்து விற்பது தெரிய வந்தது.

    இந்த லாட்ரியை கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று சட்ட விரோதமாக நடத்தி வருகிறது. அதில் 5 எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

    அதில் உள்ள 3 எண்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். எனவே, இதை 3 நம்பர் லாட்டரி என்று அழைக்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள ஏஜெண்டுகள் சம்பந்தப்பட்ட லாட்டரியின் எண்களை புதுவையில் உள்ளவர்களுக்கு அனுப்புவார்கள். அந்த நபர் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாக அந்த எண்ணை பரிமாற்றம் செய்து அதற்கான பணத்தை பெற்றுக் கொள்வார்.

    இவ்வாறுதான் பிடிபட்ட நபர் லாட்டரிகளை போன் மூலமாக விற்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் முதலியார் பேட்டை டி.எம். நகரை சேர்ந்த முருகன் (வயது 46) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ.3600 ரொக்க பணமும், லாட்டரி சீட்டு எண்கள் மற்றும் குறிப்புகள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×