search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி.வீரமணி
    X
    கி.வீரமணி

    ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்- கி.வீரமணி பேட்டி

    பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என கி.வீரமணி கூறியுள்ளார்.

    நெல்லை:

    சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய ரஜினி, பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மாட்டேன் என கூறினார். தான்கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் கூறியதற்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1971-ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர், சீதை படங்கள் அவமதிப்பு செய்ததுடன் செருப்பு மாலையும் அணிவிக்கப்பட்டது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறானது என்று பல தலைவர்கள் எடுத்து கூறியும் அவர் மன்னிப்பு கேட்க வில்லை.

    அதற்கான ஆதாரங்களை ரஜினிகாந்த் காட்ட வேண்டும். அதை தவிர வேறு ஆதாரங்களை காட்ட கூடாது. மன்னிப்பு கேட்பதும், வருத்தம் தெரிவிப்பதும் மனித பண்புக்கு அடையாளம். அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார் என்பதற்கு முன்னோட்டம் தான் அவரது பேச்சு.

    ரஜினிகாந்த்

    பத்திரிக்கைகளில் வந்த செய்தியை ஆதாரமாக நாடாளுமன்றமும், நீதிமன்றமும் ஏற்காது. ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, ‘ரஜினிக்கு தர்பார் நிச்சயம். ஆனால் ராஜ தர்பார் நிச்சயம் என்று கூற முடியாது’ என கி.வீரமணி தெரிவித்தார்.

    Next Story
    ×