என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திண்டுக்கல் அருகே ஜே.சி.பி. மீது தனியார் மில் வேன் மோதல்- 5 பெண்கள் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே ஜே.சி.பி. மீது தனியார் மில் வேன் மோதிய விபத்தில் 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் அருகே பெரியகோட்டையில் உள்ள தனியார் மில்லுக்கு இன்று காலை பெண்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. வேனை வேடசந்தூரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். காப்பிளியப்பட்டியில் இருந்து சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. வாகனம் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

  இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. வேனில் வந்த அஞ்சுகுழிப்பட்டியைச் சேர்ந்த திலகவதி (வயது 36), பெரியகோட்டையைச் சேர்ந்த பகவதி (32), சாணார்பட்டியைச் சேர்ந்த ராஜலெட்சுமி (37), தவசிமடையைச் சேர்ந்த புவனேஸ்வரி (25), செல்லப்பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரி (38) ஆகியோர் படுகாயமடைந்தனர். வேனில் வந்த மற்ற 8 பேர் லேசான காயமடைந்தனர்.

  உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் படுகாயமடைந்த 5 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×