search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்:

    மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள சிறு குழந்தைகளின் நலனை பாதுகாத்திடும் விதமாக பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தி, போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 1,229 போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 398 எண்ணிக்கையிலான 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 192 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல பயணிகள் கூடும் இடங்களில் 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு தற்காலிக குடியிருப்புகள் மற்றும் கோவில் திருவிழாக்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் அலுவலர்கள் நேரடியாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அல்லி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் வெங்கடாசலம், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், நிலைய மருத்துவ அலுவலர் ஞானக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×