search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    56 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

    கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் 56 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. மேலும் 5 மாவட்ட விவசாய பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து சாரல் மட்டுமே பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து 115.65 அடியாக உள்ளது.

    262 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு 467 கன அடி. வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. இதனால் அணைக்கு 362 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1390 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர் மட்டம் 56.30 அடியாக குறைந்துள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49 அடி. 39 கன அடி நீர் வருகிற நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.43 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 0.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    எனவே 2-ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுக்கும் வகையில் மழை தொடர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×