என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி - மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதை தொடர்ந்து மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரபாளையம் பகுதியில் வசிப்பவர்கள் ஜியாவுதீன். இவரது மனைவி ஜக்கிதான். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகன் முகமது அல்தாஸ் (6), 2-வது மகள் சுமாபர்வீன் (7) ஆகியோருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது.

  இதனை தொடர்ந்து இருவரையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து இருவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் முகம்மது அஸ்தாசுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

  இதனை தொடர்ந்து பல்லடம் சுகாதாரத்துறையினர் கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரப்பாளையம் பகுதியில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தினர். அவர்கள் நடத்திய பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  Next Story
  ×