search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் காங். தலைவர்கள் - சோனியா அதிருப்தி

    குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்கள் சோனியா காந்தியை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு ஆளும் கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கபில்சிபல்

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    “குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதால் அதை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று எந்த மாநிலமும் சொல்ல முடியாது. இது சாத்தியமற்றதும், அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் ஆகும்” என்றார்.

    கபில்சிபலின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபேந்திரசிங் ஹுடாவும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை எந்த மாநிலமும் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. அதே நேரம் அதை சட்டபூர்வ ஆய்வுகளுக்கு உட்படுத்தலாம் என்றார்.

    கட்சி தலைவர்களிடத்தில் இதுபற்றி கேட்டபோது, “மூத்த தலைவர்களே இப்படி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக செயல்படுவது சோனியா காந்தியை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது” என்றனர்.

    Next Story
    ×