search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்.
    X
    போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்.

    போலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (18-ந்தேதி) நடைபெற்று வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், பஸ், ரெயில்-விமான நிலையங்கள், பூங்காக்கள், வணிக நிறுவனங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பொம்மைகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரதுறை செயலாளர் பீலாராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரிகள் தவிர முக்கிய இடங்களிலும் முகாம் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

    3 ஆயரம் வாகனங்கள், 1000 நடமாடும் குழுக்கள் மூலமும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், ரெயில் நிலையங்கள் பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,438 நிரந்தர மையங்களிலும், மால்கள், மார்க்கெட்டுகள், பொழுது போக்கு மையங்கள் என மொத்தம் 1,645 மையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் முடிந்ததும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் X குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் P குறியீடும் போடப்படும். 7 ஆயிரம் ஊழியர்கள் இதில் ஈடுபட உள்ளனர்.

    போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் தமிழ் நாடு தொடர்ந்து 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×