search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    ஆரணியில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற அரியாத்தம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று மாட்டுப் பொங்கலையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவு வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை- பணம் கொள்ளையக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு ஆரணி டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பக்தர்கள் சார்பில் பிரார்த்தனைக்காக அம்மனுக்கு 8 பவுன் தாலிசரடு, 2 கிராம் அம்மன் பொட்டும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    மேலும் உண்டியலில் பக்தர்கள் ரூ.30 ஆயிரம் வரை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×