என் மலர்

  செய்திகள்

  விபத்து (கோப்புப்படம்)
  X
  விபத்து (கோப்புப்படம்)

  மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டபேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 50).

  இவர் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி சென்னையில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார்.

  நேற்று மாலை தடபெரும்பாக்கத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதி சாலை தடுப்பு சுவர் மீது விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பார்த்தசாரதி இறந்துவிட்டதாக தெவித்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
  Next Story
  ×