search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 7 நாளில் 4 அடி சரிவு

    மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 7 நாட்களில் மட்டும் 4 அடி சரிந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 832 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 824 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 10-ந் தேதி 113.76 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து இன்று 109.90 அடியானது. இதனால் கடந்த 7 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×