search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலையம்
    X
    கூடங்குளம் அணுமின் நிலையம்

    கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

    கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் உள்ளன. இந்த 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    முதலாவது அணுஉலையில் 900 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென வால்வில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணுஉலையிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வால்வில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

    அந்த உணுஉலையில் தற்போது 410 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, முழுதிறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை விரைவில் அடையும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×