search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    போலீஸ் வேனில் வெடிகுண்டு வீசி ரவுடி சோழனை கொல்ல சதி- அன்புரஜினி ஆதரவாளர்கள் 7 பேர் கைது

    புதுவையில் போலீஸ் வேனில் வெடிகுண்டு வீசி ரவுடி சோழனை கொல்ல சதி திட்டம் தீட்டிய அன்புரஜினி ஆதரவாளர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் பின் புறம் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் அருகே நேற்று இரவு ரவுடிகள் சிலர் பதுங்கி இருந்து சதித்திட்டம் தீட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ் பெக்டர் நாகராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.

    அங்கு இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:-

    1. நிரஞ்சன் (வயது 20), நெருப்பு குழி, லாஸ்பேட்டை,

    2. வெங்கடேஷ் (21), மடுவு பேட்.

    3. சூரியமூர்த்தி (21), கோரி மேடு.

    4. சிவராஜ் (39), மரக் காணம்.

    5. காசி (24), லட்சுமி நகர்.

    6. ஹேமச்சந்திரன் என்கிற குட்டிபுலி (24), லாஸ்பேட்டை.

    7. இரிசப்பன் (21), சாந்தி நகர், லாஸ்பேட்டை.

    கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, லாஸ்பேட்டை பிரபல ரவுடி சோழனை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர்.

    முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி சமீபத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையை சோழனின் தூண்டுதலின் பேரில் அவருடைய கூட்டாளிகள் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சோழன் கைது செய்யப்பட்டார்.

    அன்பு ரஜினி கொலைக்கு பழிக்கு பழியாக சோழனை கொல்ல வேண்டும் என்று அன்பு ரஜினியின் தம்பி ஜெரிக் மற்றும் லாஸ் பேட்டை உதயகுமார் ஆகியோர் தங்களுடைய ஆதரவு ரவுடிகளிடம் கூறி இருந்தனர்.

    அதன்படிதான் இந்த 7 பேரும் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. சோழனை ஜெயிலுக்குள்ளேயே தங்களது ஆதரவாளர்கள் மூலம் கொல்வதற்கு முதலில் திட்டம் வகுத்தார்கள்.

    ஆனால், அதற்கான வாய்ப்புகள் அங்கு இல்லை என்று தெரியவந்தது. இதனால் சோழனை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரும் போது கொல்வது என்று முடிவு செய்தனர்.

    வழக்கு விசாரணைக்காக வருகிற 22-ந் தேதி சோழனை கோர்ட்டுக்கு அழைத்து வர உள்ளனர். அந்த நேரத்தில் போலீஸ் வேனிலேயே வெடிகுண்டு வீசி அவரை கொல்வது என்று முடிவு எடுத்தனர்.

    இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்துதான் ரவுடிகள் நேற்று ஆலோசித்துக் கொண்டு இருந்தனர்.

    ஆனால், போலீசார் அவர்களை கைது செய்து விட்டனர். இதனால் பெரிய அசம்பாவித சம்பவம் நடப்பது தவிர்க்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×