search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    குளச்சலில் தி.மு.க. கூட்டணி கட்சி கூட்டம்

    குளச்சலில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    குளச்சல்:

    தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளின் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது. நகர தி.மு.க. பொறுப்பாளர் ரகீம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அர்ஜுனன், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜேசையா, நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், ம.தி.மு.க. செயலாளர் ஸ்டார்வின் தம்பிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஏரியா கமிட்டி உறுப்பினர் சசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட கவுரவ தலைவர் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் சபின், மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், நகர துணைத்தலைவர்கள் அந்திரியாஸ், பிரான்சிஸ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேக் தாவூது, மாவட்ட பிரதிநிதி பனிக்குருசு, நகர பொருளாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி அலங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×