search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சள் விற்பனை அமோகம்
    X
    மஞ்சள் விற்பனை அமோகம்

    பொங்கலை முன்னிட்டு மஞ்சள் விற்பனை அமோகம்- விவசாயிகள் மகிழ்ச்சி

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ள கோட்டை வாசல், பகவதிபுரம், கொல்லம் சாலை காலாங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுதோறும் பல ஏக்கரில் மஞ்சள் சாகுபடியை செய்து வருகின்றனர்.

    மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் சாகுபடிக்கு குறைந்த முதலிடும், குறைந்த அளவு தண்ணீரும் போதுமானது. எனவே அதனை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் விவசாயிகள் செங்கோட்டை தாலுகா உட்பட்ட பகுதிகளில் பல ஏக்கர்களில் மானவாரி பயிராக மஞ்சள் சாகுபடி பயிரிட்டுள்ளனர். தற்போது பொங்கலை முன்னிட்டு மஞ்சள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    தற்போது மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம். மஞ்சளானது ஒரு குலையில் 500 முதல் 700 கிராம் வரை அமோகமாக விளையும். விளைந்த மஞ்சள் குலைகளை மொத்த வியாபாரிகள் விளைநிலத்திலேயே வாங்கி செல்வதால் எங்களுக்கு அறுவடை செய்து எடுத்து செல்லும் வேலையையும் குறைத்து விட்டது. பொங்கல் திருநாளுக்காக மஞ்சள் குலையை வாங்க இங்குள்ள வியாபாரிகள் அதிகளவு ஆர்வம் காட்டுவதால் 8 மாத பயிராக உள்ள மஞ்சள் குலையை வெட்டி எடுத்து வருவதால் குறைந்த மாதத்தில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் விளைந்த மஞ்சளை வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பயனடைந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×