என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  மதுரையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.62 ஆயிரம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.62 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகிறார்கள்.
  மதுரை:

  மதுரை பழைய குயவர்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). இவர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு கடையை பூட்டினார்.

  இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.62 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

  இது குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.62 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம மனிதர் களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×