search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.30,112-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதட்டம் காரணமாக தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.

    சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.3782-க்கும், பவுன் ரூ.30,256-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.3,764-க்கும், பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.30,112-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து கிராம் ரூ.49.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.49,700-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×