search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலிகை செடி கண்காட்சியை பார்வையிட்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    மூலிகை செடி கண்காட்சியை பார்வையிட்ட தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    இளமையுடன் இருக்க சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    ‘என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமானால் அனைவரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும்’ என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
    சென்னை:

    மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ‘சித்த மருத்துவ திருநாள்’ நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், மூலிகை செடிகள் மற்றும் சித்த மருந்துகள் கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதில், மத்திய ஆயுஷ் இணை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் பதக், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி, தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    நான் ஆங்கில மருத்துவராக இருந்தாலும் சித்த மருத்துவத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. என்றும் இளமையோடு இருக்க வேண்டுமானால் சித்த மருத்துவத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். நான் தெலுங்கானா கவர்னராக பதவியேற்ற போது, அங்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வந்தது. தமிழகத்தில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரை அங்கு கொடுத்து டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

    யோகா

    தெலுங்கானா கவர்னர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் காலை 5.30 மணிக்கு யோகா பயிற்சி வழங்கப்படுவதால் அனைவரும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர். நல்ல விஷயங்களை செயல்படுத்துவதில் தெலுங்கானாவுக்கும் தமிழகத்துக்கும் பாலமாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில், சித்த மருத்துவம் குறித்த பல்வேறு புத்தகங்கள் மற்றும் செயலிகள்(ஆப்), விழா மலர் வெளியிடப்பட்டது.
    Next Story
    ×