search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ‘டிக்-டாக்’ வீடியோ மூலம் துப்பு துலங்கியது - வழிப்பறி செய்த 7 சிறுவர்கள் கைது

    சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 7 சிறுவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னையில் தியாகராயநகர், நுங்கம்பாக்கம், சூளைமேடு ஆகிய பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்பவர்களை தாக்கி அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. நுங்கம்பாக்கத்தில் சமீபத்தில் ராகேஷ்நாயர் என்ற கம்ப்யூட்டர் நிறுவன அதிகாரியை தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    ஒரே கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கும்பலை பிடிக்க தியாகராயநகர் துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ‘டிக்-டாக்’ வீடியோ காட்சியில் கிராமிய பாடல்களை பாடி அசத்திய சிறுவன் ஒருவன் இந்த வழிப்பறி கொள்ளை கும்பலில் இருப்பது தெரிய வந்தது.

    அதை அடிப்படையாக வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 7 சிறுவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தனித்தனியாக பிரிந்து மோட்டார் சைக்கிள்களில் சென்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் செல்போன், தங்க சங்கிலி மற்றும் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

    கஞ்சா போதைக்கு அடிமையான இவர்கள், வழிப்பறி கொள்ளையில் கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவு செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×