search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகர்பாபு எம்.எல்.ஏ.
    X
    சேகர்பாபு எம்.எல்.ஏ.

    2,200 குடும்பங்களுக்கு வால்டாக்ஸ் சாலையில் வீடு- சேகர்பாபு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    காந்திநகரில் வசிக்கும் 2,200 குடும்பங்களுக்கு வால்டாக்ஸ் சாலையில் வீடு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் சேகர்பாபு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்) பேசும்போது, ‘சென்னை நதிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட காந்திநகரில் 2,200 வீடுகளில் உள்ள மக்களை பெரும்பாக்கம் திட்ட பகுதிக்கு கொண்டு செல்கின்ற பணி 10 நாட்களாக நடந்து வருகிறது. இந்த மக்களுக்கு வால்டாக்ஸ் சாலையிலேயே 5 ஏக்கர் இடம் இருக்கிறது. அங்கேயே வீடுகளை கட்டி தர வேண்டும் என்று நான் வலியுறுத்தி வந்தேன். இந்த பணி தொடங்குவதற்கு முன்பாகவே அந்த பகுதி மக்களை பெரும்பாக்கத்திற்கு இடம் மாற்றி இருக்கிறார்கள். மக்களை அப்புறப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘உறுப்பினர் பி.கே.சேகர்பாபு கூறிய பகுதியில் 2,092 குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 120 குடும்பங்கள் பெரும்பாக்கம் திட்டப்பகுதிக்கு தாமாகவே விருப்பம் தெரிவித்து செல்கிறார்கள். சில குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் என கருதி இந்த ஏப்ரல் மாதம் குடி அமர்த்த கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
    Next Story
    ×