
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் பசூர் ஊராட்சியில் உள்ளது புதுப்பாளையம். இங்கு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
2½ கி.மீட்டர் தூரமுள்ள தாசம்பாளையத்தில் இருந்து 6 மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தாமதமாக வருகிறார்கள். இதனால் 6 மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுகிறது.
இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியை சகிகலா மற்றும் ஆசிரியர்கள் தங்களது செலவில் வாடகைக்கு ஆட்டோ ஏற்பாடு செய்தனர். தாசம்பாளையத்தில் இருந்து 6 மாணவர்களும் உரிய நேரத்தில் வகுப்புக்கு வந்து விடுகிறார்கள். இது குறித்து அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் பெற்றோர், பொதுமக்கள் ஆசிரியர்களை பாராட்டினர்.