search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    பூமார்க்கெட்டில் கடைகளை இடிக்க முயற்சி: வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடைகளை இடிக்க முயற்சித்ததால், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    திருப்பூர் நகரம் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் திருப்பூர் டவுன்ஹால், தென்னம்பாளையம் மார்க்கெட் ஆகியவை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பழைய பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக முத்துப்புதூர் மாநகராட்சி பள்ளி இடிக்கப்பட்டுள்ளது. அதே போல பூ மார்க்கெட்டை திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றி கொள்ளும் படி மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது.

    ஆனால் பூ மார்க்கெட் வியாபாரிகள் சுப்பராயன் எம்.பி. தலைமையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டருடன் பேச்சு வார்த்தை நடத்தி பொங்கல் வரை இதே இடத்தில் பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த கட்டண கழிப்பிடத்தை பூட்டி வைத்ததுடன் குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டனர். இதனால் பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடைகளை இடிக்க முயற்சித்ததால், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி உதவி கமி‌ஷனர் சபியுல்லா நடத்திய பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

    Next Story
    ×