
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குப்பத்தேவன் பகுதியைச் சேர்ந்த ராமுத்தேவர் மனைவி செல்லம்மாள் ( வயது73) என்பவர் தனது வீட்டில் ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து செல்லம்மாளை போலீசார் கைது செய்தனர்.
அதே போல மல்லிபட்டினம் அடுத்த சின்னமனையில் காசிநாதன் மனைவி மருதாயி (வயது 38) என்பவர் தனது வீட்டில் ஒரு கிலோ 25 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருதாயியை போலீசார் கைது செய்தனர்.