search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ஒரு சவரன் ரூ.30,344-க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 6-ந்தேதி ரூ. 31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டிய நிலையில் நேற்று விலை சரிந்தது.

    இன்று கிராமுக்கு மேலும் ரூ. 12 குறைந்து ரூ. 3,793-க்கும், பவுனுக்கு ரூ. 96 குறைந்து ரூ. 30,344-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ. 50.10-க்கும், கிலோவுக்கு ரூ. 300 குறைந்து ரூ. 50 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×