
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ராஜேந்திரன்(வயது 24). இவர் திருப்பூரில் உள்ள தனது சகோதரனுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கடந்த 1-ந்தேதி குருவன்கோட்டை வந்துள்ளார். அப்போது அவருடைய அம்மா இறந்து விட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் பால்ராஜ் வெளியூருக்கு சென்றுள்ளார். வீட்டில் ராஜேந்திரன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த பால்ராஜ் நேற்று வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே சந்தேகமடைந்த பால்ராஜ் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது ராஜேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார், அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.