search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலில் தத்தளித்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.
    X
    கடலில் தத்தளித்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.

    படகு கவிழ்ந்து விபத்து - நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

    நடுக்கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்ததால் தத்தளித்த 6 மீனவர்களை மீட்ட மீனவர்கள் அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர்.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த டோமினிக் (வயது 55), இசக்கிராஜா, ராஜ், சூசை, சிலுவை மகன் ராஜ், இளங்கோ ஆகிய 6 பேர் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை நாட்டுப்படகில் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்று காலை 11 மணிக்கு குலசேகரபட்டினத்தில் இருந்து 41 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் மிதந்த மரத்தடியை பிடித்தவாறு தத்தளித்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று புன்னைக்காயலை சேர்ந்த எடிசன் உள்பட 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு 11 மணிக்கு சென்றபோது நடுக்கடலில் 6 மீனவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக 6 பேரையும் மீட்டு தங்கள் படகில் அழைத்துவந்தனர். 12 மணி நேரமாக கடலில் தத்தளித்ததால் 6 மீனவர்களும் மயக்க நிலையில் காணப்பட்டனர்.

    இதையடுத்து அவர்களை இன்று காலை புன்னைக்காயலில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×