search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகற்காய் தோட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    பாகற்காய் தோட்டத்தை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி பகுதியில் பாகற்காய் விளைச்சல் அமோகம்

    போச்சம்பள்ளி பகுதியில் சமீபத்தில் பெய்த பருவமழை காரணமாக பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நெல், கரும்பு, தக்காளி மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு அடுத்த படியாக, முள்ளங்கி, புடலை, சுரைக்காய் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பெய்த பருவமழை காரணமாக, சந்தையில் பாகற்காய் நல்லவிலை கிடைக்கிறது. இதனால் பாகற்காய் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

    குறிப்பாக போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாகற்காய் மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. சில இடங்களிள் சரியான நேரத்தில் மழை பெய்ததால், பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இது குறித்து குண்டுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ருத்ரமுனி  கூறியதாவது,

    புரட்டாசி மாதம் 20-ம் தேதிக்குமேல் பாகற்காய் பயிரிட்டேன். பாகற்காய் பயிர் 40 நாள்களில் காய்க்கத் தொடங்கிவிடும். அதில் இருந்து வாரத்துக்கு இருமுறை காய்களை பறிக்க வேண்டும். 6 மாதகாலம் கொண்ட இப்பயிரால் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பதால் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் சிறு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். 
    Next Story
    ×