search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்கள் விலை உயர்வு
    X
    பூக்கள் விலை உயர்வு

    பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு

    பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, வக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து சேலம், ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியதால் பூக்கள் வரத்து குறைந்தது.

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அறுவடைக்காக சிறப்பு பூஜைகள் நடைபெறும். எனவே பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    தற்போது வரத்தும் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1300, கனகாம்பரம் மற்றும் முல்லை ரூ.700, காக்கரட்டான் ரூ.500, கோழிக்கொண்டை ரூ.500, ஜாதிப்பூ ரூ.400, சம்மங்கி ரூ.30, செவ்வந்தி ரூ.50,  அரளி ரூ.60 என்ற விலையில் விற்பனையானது.

    Next Story
    ×