search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் - அமைச்சர் காமராஜ் விளக்கம்

    டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் கோவி.செழியன் (தி.மு.க.), நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதில் வருமாறு:-

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 19 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார். அப்போது கேள்வி எழுப்பிய துரைமுருகன் (தி.மு.க.) நெல் கொள்முதல் நிலையங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. எங்கள் பகுதியான திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களிலும் ஏராளமாக நெல் உற்பத்தி ஆகிறது. எனவே கடந்த பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா என்று கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ‘‘டெல்டா மாவட்டங்கள் அல்லாத பகுதிகளிலும் 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் தங்கள் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் இடத்தை குறிப்பிட்டு கோரிக்கை வைத்தால் அது பரிசீலிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×